பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கக் கேரளா அரசு முடிவு செய்துள்ளது.
கேரள அரசு வெளியிட்டுள்ள தகவலில், மத்திய அரசின் உத்தரவுக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்புகள் இருந்தாலும், அரசுப் பள்ளிகளில் இந்தி கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளம் மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக இந்தியில் உயர்மட்ட திறன்களை மாணவர்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மூன்று மொழி திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அரசுப் பள்ளிகளில் தினசரி இந்தியில் உரையாடல்கள், விவாதங்கள் நடைபெறும் என்றும், மாணவர்களின் இந்தி படைப்புகள் ஊக்குவிக்கப்படும் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.