சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக 8 மணி நேரத்திற்கும் மேலாக நீதிபதி விசாரணை நடத்தினார்.
திருப்புவனத்தில் நகையைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனிப்படை போலீசார் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோவை பதிவு செய்த கோயில் பணியாளரான சக்தீஸ்வரன், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலக உதவியாளர் பெரியசாமி, கோயில் பணியாளர்கள் ஆகியோரிடம், நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தினார்.
நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணையின்போது, நகை தொலைந்தது குறித்துப் பதிவு செய்யப்பட்ட CSR மற்றும் FIR ஆவணங்கள், காவல்நிலைய மற்றும் கோயில் சிசிடிவி DVR ஆகியவை நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.