கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘THE OFFICER OF THE ORDER OF THE STAR OF GHANA’ விருது வழங்கப்பட்டது.
அக்ரா நகரில் உள்ள ஜூபிலி ஹவுஸில் நடைபெற்ற அரசு விருந்தின்போது, கானாவின் மிக உயரிய குடிமகன் விருதான ‘THE OFFICER OF THE ORDER OF THE STAR OF GHANA’-வை பிரதமர் நரேந்திர மோடி பெற்றார்.
இந்த விருது இந்தியா – கானா இடையேயான உறவுகளை ஆழப்படுத்தும் வகையிலும், உட்கட்டமைப்பு மற்றும் கல்வித் திட்டங்கள் மூலம் கானாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.
இந்நிலையில், கானாவின் உயரிய குடிமகன் விருதை பெற்றது தனக்கு பெருமை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.