இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை சோனியா, ராகுல் ஆகியோர் 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக அமலாக்கத்துறை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நேஷ்னல் ஹெரால்டு பத்திரிக்கையை கையகப்படுத்திய விவகாரத்தில் இரண்டாயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணையின்போது அமலாக்கத்துறை தரப்பில், இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் பங்குகளை, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வெறும் 50 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், சோனியா மற்றும் ராகுல் காந்தியின் நெருங்கிய கூட்டாளிகள், நேஷ்னல் ஹெரால்டு பத்திரிக்கையின் தாய் நிறுவனமான THE ASSOCIATED JOURNALS LIMITED நிறுவனத்தின், இயக்குநர்களாக நியமிக்கப்பட்டதால் மோசடி பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
வாதங்களை கேட்ட நீதிபதி நேரமின்மை காரணமாக வழக்கு விசாரணையை இன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தார்.