கரூர் மாவட்டம் லாலாபேட்டை கடைவீதி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, தூக்கு தேரோட்ட நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
லாலாபேட்டை கடை வீதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் ஆனி திருவிழா கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தூக்கு தேரோட்ட நிகழ்வை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார்.
5 டன் எடை கொண்ட தூக்கு தேரை 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது தோள்களில் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக சென்றபோது வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.