திருச்சி மாவட்டம் குணசீலம் பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
குணசீலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான சத்தியநாராயணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்மநபர், அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றார்.
காலில் காயமடைந்த சத்தியநாராயணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டர்.
இந்நிலையில், தாக்குதலில் தொடர்புடைய சண்முகம் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், உறவினர் பெண்ணுடன் தகாத உறவிலிருந்து நிலத்தை அபகரிக்க முயன்றதால் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரை அரிவாளால் தாக்கியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, சண்முகத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.