ஐஸ்வர்யா ராயுடன் மணமுறிவா என்பது குறித்த கேள்விக்கு, எதிர்மறையான செய்திகளை வெளியிடுவோர் கொஞ்சம் சுயபுத்தியை பயன்படுத்த வேண்டும் என்று நடிகர் அபிஷேக் பச்சன் பதிலளித்துள்ளார்.
அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் திருமண வாழ்க்கை குறித்த வதந்தி ஒரு வருடத்திற்கும் மேலாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இந்த நிலையில், காளிதர் லாபட்டா படத்துக்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சன், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துப் பதிலளித்துள்ளார்.
முன்பெல்லாம் தன்னை பற்றிச் சொல்லப்படும் விஷயங்கள் தன்னை பாதித்ததில்லை எனவும், ஆனால் இன்று தனக்கு ஒரு குடும்பம் உள்ளதால் அது தனக்குக் கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வதந்திகளுக்கு விளக்கம் அளித்தாலும், மக்கள் வேறு விதமாக எடுத்துக் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.