உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரரையும் காவல்துறையினர் தாக்கியிருப்பது அரச பயங்கரவாதம் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினரை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அஜித் குமாரை விசாரணை என்ற பெயரில் காவலர்கள் தாக்கி படுகொலை செய்துள்ளதை விசிக வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் எந்தவித தொடர்புமில்லாத அஜித் குமாரின் சகோதரர் நவீன் குமாரையும் காவலர்கள் தாக்கியுள்ளது அரச பயங்கரவாதம் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட அஜித் குமார் குடும்பத்திற்கு அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.