அனைத்திற்கும் துணிந்துதான் வீடியோவை வெளியிட்டதாக, உயிரிழந்த அஜித்குமாரை போலீசார் தாக்கியதை படம் பிடித்த சக்தீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்
அனைத்திற்கும் துணிந்துதான் வீடியோவை வெளியிட்டேன் என்றும், என்னை மிரட்டுவதன் மூலம் அனைவரையும் மிரட்டி விடலாம் என நினைக்கின்றனர் என்று அவர் கூறினார்.
அஜித்குமாரை நாங்கள் தான் தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்ததாக வதந்தி கிளப்புவதாக கூரியவர், காவல்துறை எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சக்தீஸ்வரன் குறிப்பிட்டார். அஜித்குமாரின் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பாதுகாப்பு வழங்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என்று அவர் கூறினார்.