தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
செவல்குளம் அருகே அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஆம்னி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணித்த நாராயணன் என்பவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத்துறையினரின் கால தாமதமே உயிரிழப்புக்குக் காரணம் என அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.