கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையின் நீர்மட்டம் 115 புள்ளி 20 அடியை எட்டியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொள்ளாச்சி அருகே உள்ள 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 115 புள்ளி 20 அடியை எட்டியது.
அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து விநாடிக்கு 176 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆழியாறு கரையோரக் குடியிருப்பு மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.