சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோயில் தேரோட்டத்தில், அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரிய வழக்கினை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வரும் 8 ஆம் தேதி கண்டதேவி ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனையொட்டி தேரோட்டத்தில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது என்றும், அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பழக்க வழக்கம் உள்ளது என்றும், அதனால் மத நம்பிக்கையில், உடனடியாக தலையிட இயலாது எனவும் கூறினர்.
மேலும், இதுகுறித்த வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணையில் இருப்பதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.