ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வாடகை வாகன நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது.
அதில், ஓலா, ஊபர் நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் கட்டணம் வசூலிப்பதற்கான உச்சவரம்பு ஒன்றரை மடங்காக இருந்த நிலையில், தற்போது 2 மடங்காக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.