திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் கடை வீதியில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில் எதிரில் உள்ள கடைவீதி முழுவதும் நிழலுக்காகப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ வேகமாகப் பரவி பந்தல் பற்றி எரியத் துவங்கியது.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுப்படுத்தினர்.
எனினும், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.