உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கித் தவித்த பக்தர்களை, மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
உத்தரகாண்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒருசில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ருத்ரபிரயாக் பகுதியில் கேதார்நாத் யாத்திரை சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த 40 பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கியதாகத் தகவல் கிடைத்ததது.
இதையடுத்து அங்குச் சென்ற பேரிடர் மீட்புப் படையினர், 40 பக்தர்களையும் பத்திரமாக மீட்டனர்.