ஆக்சிம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுபன்ஷு சுக்லா, விண்வெளியில் ஒரு வார காலத்தை நிறைவு செய்தார்.
ஆக்சிம்-4 திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் கடந்த 25ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
ஆக்சிம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற 4 பேர் கொண்ட குழுவினர் ஒரு வாரத்தை நிறைவு செய்துள்ளதாக ஆக்சிம் ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்வெளி வீரர்கள் பூமியைச் சுற்றி வருவதாகவும், 2.9 மில்லியன் மைல்களுக்கு மேல் வீரர்கள் சுற்றியிருப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த தூரம் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட கிட்டத்தட்ட 12 மடங்கு அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பணி இல்லாத நேரத்தில் குடும்பத்தினருடன் விண்வெளி வீரர்கள் பேசியதாகவும், தொடர்ந்து ஆராய்ச்சியை பணியை வீரர்கள் மேற்கொண்டு வருவதாகவும் ஆக்சிம் ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.