இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் உருவாகி வரும் தி ஒடிசி படத்தின் டீசர் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மாட் டாமன் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் , பிரபல கிரேக்கக் கவிஞரான ஹோமர் எழுதிய ‘த ஒடிசி’ கவிதையைத் தழுவி எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், ஒடிசி படத்தின் டீசரை Jurassic World Rebirth படம் வெளியாகும் திரையரங்குகளில் நாளை வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் அதற்கு முன்னரே படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.