ராமாயணா முதல் பாகம் படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது.
நமீதா மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை நிதிஷ் திவாரி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர்.
இதில் முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.