வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது பாம்பு புகுந்ததால் மைதானத்திற்குள் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இலங்கை, வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் உள்ள Premadasa மைதானத்தில் நடைபெற்றது.
போட்டி விறுவிறுப்பாக நடந்த சமயத்தில் மைதானத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது. பின்னர் மைதானத்தில் இருந்து பாம்பு பிடிக்கப்பட்டதும் போட்டி மீண்டும் நடைபெற்றது.