திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கும்பாபிஷேக விழாவிற்கான ஆறாம் கால யாக சாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா வரும் 7-ந் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி கோயில் ராஜகோபுரத்தின் கீழ் பகுதியில் 76 வேள்வி குண்டங்கள் அமைக்கப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து காலை மாலை என 12 கால யாக சாலை பூஜைகள் நடைபெறும் நிலையில், ஆறாம் கால யாகசாலை பூஜை விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.