மேலூர் அருகே இளம்பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான தீபன்ராஜ் என்பவரைக் கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்துள்ளார்.
இருவரும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பகுதியில் சந்தித்துப் பேசியபோது தீபன்ராஜ் மற்றும் அவரது நண்பர்களான மதன், சுகுமாறன் ஆகியோர் சேர்ந்து இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இளம்பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், 3 பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.