புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததால், விவசாயிகளுக்கும், காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ரெத்தனைக்கோட்டை கிராமத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வருவாய்த்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களுடன் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், திடீரென போராட்டத்தில் குதித்தனர்.
அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை பலன் அளிக்காததால், விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்குப் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.