மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் WASHINGTON FREEDOM அணிக்கு எதிரான போட்டியில் TEXAS SUPER KINGS அணி வெற்றி பெற்றது.
6 அணிகள் களம் காணும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. 23ஆவது லீக் போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதன்படி முதலில் களமிறங்கிய TEXAS SUPER KINGS அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் சேர்த்தது.
88 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய WASHINGTON FREEDOM அணி 5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 44 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் TEXAS SUPER KINGS அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.