நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளை வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிக்குள் விரட்டியது தொடர்பான ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் உணவு, குடிநீர் தேடி காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன. இதுகுறித்து குடியிருப்பு வாசிகள் புகாரளித்த நிலையில், மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் யானைகளை விரட்டும் பணி முடுக்கி விடப்பட்டது.
பெங்களூருவிலிருந்து சிறப்பு ட்ரோன் இயக்கும் குழுவினர் வரவழைக்கப்பட்டு யானைகளை முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். யானைகள் பாதுகாப்பாக விரட்டப்பட்ட நிலையில், ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.