ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நிலவியது.
பெருந்துறை சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் தபால் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
அதில், இந்த மாதத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்றும், வெடிகுண்டு வைப்பவர்கள் யார் என்று தனக்குத் தெரியும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
மேலும், தனக்கு உரியப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தால் வெடிகுண்டு வைப்பவர்கள் யார் என்ற விபரத்தைக் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கடிதம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.