சர்ச்சை பேச்சு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்குகளில் காவல்துறை புலன் விசாரணை செய்யத் தயங்கினால், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
பெண்கள் குறித்தும் சைவ – வைணவ சமயங்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கானது நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பொன்முடிக்கு எதிராக 3 காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பேச்சு வெறுப்பு பேச்சு வரம்பில் வராது எனக்கூறி, முடித்து வைக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பொன்முடிக்கு எதிரான புகார்கள் மீது காவல்துறையினர் புலன் விசாரணை செய்யத் தயங்கினால், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் என எச்சரித்த நீதிபதி,
அமைச்சராகப் பதவி வகித்தவர் ஏன் இவ்வாறு பேச வேண்டுமென அதிருப்தி தெரிவித்தார்.