இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் அணுஆயுதப் போரின் விளிம்பிற்குச் சென்றதாக அந்நாட்டுப் பிரதமரின் ஆலோசகரான சனாவுல்லா ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து பேசிய சனாவுல்லா, இந்தியா ஏவிய பிரம்மோஸ் ஏவுகணை, அணுஆயுதத்தை ஏந்தியிருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க 30 முதல் 45 வினாடிகள் மட்டுமே இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு குறுகிய காலத்தில் எடுக்கப்படும் எந்த முடிவும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும் எனவும் சனாவுல்லா தெரிவித்துள்ளார்.