பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி எனவும், பயங்கரவாதத்திற்கு எப்போதும் அடைக்கலம் அளிக்க கூடாது எனவும், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான தங்களின் போராட்டத்தில் துணை நின்றதற்காக அந்நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்தியாவும், டிரினிடாட் அண்ட் டொபாகோவும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், மோதல்கள் பெருகி வரும் இந்த காலத்தில், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை அவசியமானது எனவும் கூறினார்.
அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அதிகளவில் பெண்கள் உள்ளதற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, பெண்கள் மீதான மரியாதை என்பது இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய ஒன்று என குறிப்பிட்டார்.
விண்வெளி முதல் விளையாட்டு வரை பல துறைகளில் இந்தியாவை புதிய எதிர்காலத்தை நோக்கி பெண்கள் வழிநடத்தி செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
டிரினிடாட் மற்றும் டொபாகோ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அர்ஜென்டினா புறப்பட்டு சென்றார். 2018ஆம் ஆண்டுக்கு பிறகு 2ஆவது முறையாக அவர் அர்ஜென்டினா செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜாவிர் மெய்லியை சந்திக்கும் மோடி, பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.