சேலம் செவ்வாய்ப்பேட்டையில் இரவு நேரத்தில் விசாரணைக்கு வருமாறு செல்போனில் அழைத்து போலீசார் டார்ச்சர் செய்வதாக வெள்ளி பட்டறை உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.
தாதகாப்பட்டியைச் சேர்ந்த சரவணனும், செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த சங்கரும் வெள்ளி பட்டறை வைத்து நடத்தி வருகின்றனர். வெள்ளிக்கட்டி பரிவர்த்தனையில் இவ்விருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் சரவணன் மீது சங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் அவரை விசாரணைக்கு அழைத்த போலீசார், சங்கரிடம் வெள்ளி கட்டிகளை வழங்க தேதி குறிப்பிட்டு சரவணனிடம் வலுக்கட்டாயமாக எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட சரவணன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் அவரை தொடர்ந்து செல்போனில் தொடர்புகொண்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.