செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 130 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் ஏராளமான கடைகளில் ரகசியமாக குட்கா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட தனிப்படையினர், அண்ணா சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடியின் 3-வது தளத்தில் இருந்து 130 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.