மொழியின் பெயரால் யாரும் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது என மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் எச்சரித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி பேசாத உணவக உரிமையாளர், தாக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ வெளியானதை தொடர்ந்து, தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இத்தகைய செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.