குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியது.
இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் புகுந்து வாகனங்கள் பழுதாகி நின்றதால், அவற்றைப் பயணிகள் உதவியுடன் தள்ளிச்செல்லும் அவலநிலை ஏற்பட்டது.
இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். பனஸ்கந்தா மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.