பெங்களூருவில் நம்ம பில்டர் காபி கடையில் கூடுதலாக கப் கேட்ட விவகாரத்தில் வாடிக்கையாளர்களுக்கும் கடையின் ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.பெங்களூரு சேஷாத்ரிபுரத்தில் நம்ம ஃபில்டர் காபி கடை உள்ளது.
அங்குக் காபி சாப்பிட வந்த வாடிக்கையாளர் ஒருவர் கூடுதலாக கப் கேட்டுள்ளார். ஆனால் கடையின் ஊழியர் தர மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கடையின் ஊழியரை நண்பருடன் சேர்ந்து வாடிக்கையாளர் தாக்கியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.