நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மாற்றுச் சான்றிதழை வழங்க மறுக்கும் தனியார் கல்லூரி நிர்வாகம் பணம் கேட்டு மிரட்டுவதாக குற்றஞ்சாடி, மாணவி ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
குமாரபாளையத்தை சேர்ந்த மாணவி ஒருவர், அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 15 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி சேர்ந்துள்ளார். பின்னர் அவருக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைத்ததால் பணத்தையும், சான்றிதழையும் மாணவி திருப்பி கேட்டுள்ளார்.
இதனை தர மறுத்த கல்லூரி நிர்வாகம், 75 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்துமாறு கேட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி தனது குடும்பத்தினருடன் கல்லூரி முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.