அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வரும் 7-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் அவருக்கு Z பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே அவருக்கு Y பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.