புதுச்சேரியில் கோர்டெலியா குரூஸ் (Cordelia Cruises) சொகுசு கப்பல் சேவையைச் செயல்படுத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோர்டெலியா குரூஸ் என்ற நிறுவனம் சென்னை, விசாகப்பட்டினம், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சுற்றுலா சொகுசு கப்பலை இயக்கி வருகிறது.
பல்வேறு நகரங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளைப் புதுச்சேரி உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் இறக்கிவிட்டுச் சென்றது.
அப்போது சொகுசு கப்பல் சேவையைச் செயல்படுத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.