உக்ரைன் மீது நேற்று ஒரே இரவில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வெளித் தாக்குதல் இது எனக் கூறப்படுகிறது.
உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 23 பேர் காயமடைந்தனர்.
இந்த மிகப்பெரிய வான்வெளி தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதில் பெரும்பாலானவை ஷாஹெட் ட்ரோன்கள் என்றும், இதில் சுமார் 11 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.