கோவை அருகே அதிவேகமாக வந்த கார் சாலையோர விளைநிலத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சூலூர் அருகே உள்ள செலக்கரசல் பகுதியில் கார் ஒன்று அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விவசாய நிலத்தில் தலைகுப்புற கார் கவிழ்ந்தது.
இதையடுத்து அங்கிருந்த மக்கள், காரில் இருந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.