கொக்கைன் போதைப்பொருள் வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த காங்கிரஸ் நிர்வாகி பிடிபட்டுள்ளார்.
கொக்கைன் போதைப்பொருள் வழக்கில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரதீப்குமார், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் கிருஷ்ணா உள்ளிட்ட 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராயப்பேட்டையைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி பயாஸ் ஷமேட் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், அவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் சிக்குவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.