உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து இதுவரை இல்லாத அளவில் ரஷ்யா அதிகப்படியான டிரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா முடுக்கி விட்டிருக்கிறது.
முக்கியமாக கீவ் நகரில் இடைவிடாமல் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடந்தது. இந்த நிலையில், இரவு முழுவதும் 550 டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக உக்ரைன் கூறியுள்ளது.
மேலும், சைரன்கள் அலறிக்கொண்டே இருந்ததால், அது ஒரு கடினமான இரவாக அமைந்ததாகவும், போரை முடிவுக்குக் கொண்டு வரும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்பது தெளிவாகி விட்டதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.