காலக்கெடுவை விட இந்தியாவின் நலனே முக்கியம் என்று வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், இந்தியாவின் நலனை உறுதிசெய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும், அதனை மனதில் வைத்துக் கொண்டு, சிறந்த ஒப்பந்தத்தை தயார் செய்தால் வளர்ந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
மேலும், பரஸ்பரம் நலம் பயக்கும் வகையிலிருந்தால் மட்டுமே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகும் எனவும், குறிப்பிட்ட காலக்கெடு அல்லது அழுத்தங்களின் அடிப்படையில் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட மாட்டோம் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.