பீகாரில் பாஜக மூத்த தலைவர் கோபால் கெம்கா மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பாட்னா நகரில் பாஜகவின் மூத்த தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரான கோபால் கெம்கா மர்ம நபர்களால் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாட்னாவின் டவர் சொசைட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே மர்மநபர்கள் படுகொலை செய்தனர். ஆறு ஆண்டுகளுக்கு முன் அவரது மகன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் கோபால் கெம்காவும் மகனைப் போன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.