நடிகர் வசந்த் ரவி நடித்த ‘இந்திரா’ படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் சபரிஸ் நந்தா இயக்கத்தில் கிரைம் திரில்லர் கதையாக உருவான இப்படத்தில் கல்யாண் மாஸ்டர், சுனில், அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார்.
இப்படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ படத்திற்கு இசையமைத்த அஜ்மல் தசீன் இசையமைக்கிறார். இந்த நிலையில், ‘இந்திரா’ படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மருத்துவம், பிரேதப் பரிசோதனைப் பின்னணியில் காட்சிகள் அமைந்ததுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.