கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில் 24-வது புத்தகக் கண்காட்சி தொடங்கியது.
இதில் 130 பதிப்பகங்களைச் சேர்ந்த, 170 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சிக்கு முதல் நாளிலேயே வருகை தந்த ஏராளமான புத்தகப் பிரியர்கள், அரங்குகளைப் பார்வையிட்டு தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். 10 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.