2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழக பாஜகவின் முதல் மாநாடு ஆகஸ்ட் 17 ஆம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் மாநாடு தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக பாஜகவின் முதல் மாநாடு வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளது.
செப்டம்பர் 13-ம் தேதி மதுரையிலும், அக்டோபர் 26ம் தேதி கோவையிலும், நவம்பர் 23-ஆம் தேதி சேலத்திலும் மாநாடு நடைபெறுகிறது.
மேலும், டிசம்பர் 21-ம் தேதி தஞ்சாவூரிலும், அடுத்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி திருவண்ணாமலையிலும், ஜனவரி 24-ஆம் தேதி திருவள்ளூரிலும் மாநாடு நடைபெற இருக்கிறது.
அதிமுகவுக்கு நாம் சுமை அல்ல, பலம் என்பதை காட்ட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.