திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு, நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில், விடுமுறை தினமான இன்று, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தொடர்ந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, 4 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். எனவே, கூடுதலாக வரிசை அமைத்து கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.