வரும் மாதங்களில் பாஜகவின் கட்சி பணிகள் மேலும் வேகமெடுக்கும் என, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், மாநிலங்களில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நிர்வாகிகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எந்தெந்த வாக்குச்சாவடி மையங்களில் யார் யார் செல்ல போகிறார்கள் என்பது குறித்து பயிலரங்கத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாகவும், வாக்குச்சாவடி மையங்களில் உள்ள நிறை, குறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
வரும் மாதங்களில் பாஜகவின் கட்சிப் பணிகள் வேகமெடுக்கும் என்றும், பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
கட்சியின் பொறுப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்றும், டெல்லி, மத்திய பிரதேசத்தின் தேர்தல் முடிவுகளை பெண் வாக்காளர்கள் மாற்றியுள்ளதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.