பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் லுலாடா சில்வா ஆரத்தழுவி வரவேற்றார்.
பிரேசிலில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் அழைப்பு விடுத்தார். அதன்பேரில் பிரேசில் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் கைகளை கோர்த்தபடி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.