தமிழகத்தில் சுமார் 2 லட்சம் மீனவர்கள் மத்திய அரசின் திட்டங்களால் நேரடியாக பயனடைந்து வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற பாஜக மாநில பூத் நிர்வாகிகள் பயிலரங்கத்தில் பேசிய அவர், மத்திய அரசு சார்பில் தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வருடத்திற்கு ரூ.6,000 செலுத்தப்படுவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் 2 லட்சம் மீனவர்கள் நேரடியாக பிரதமரின் திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர் என்றும், அனைத்து வீடுகளிலும் மத்திய அரசின் ஏதாவது ஒரு திட்டம் மூலமாக மக்கள் பயனடைந்து வருவதாகவும் கூறினார்.