இருள் நீங்கி மக்கள் விரும்பும் நல்லாட்சி மலர முருகப்பெருமானை வேண்டி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்புடன் நடைபெறுகிறது. வங்க கடலோரம் சூரபத்மனுடன் போர் புரிந்து அவனை வதம் செய்து முருகப்பெருமான் மக்களை காத்து அருள்பாலித்த இடம் திருச்சீரலைவாய் என தெரிவித்துள்ளார்.
வேண்டி விரதம் இருந்து மனமுருகி கேட்கும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுப்பான் நம் வேலவன். தமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக சூழ்ந்திருக்கும் இருள் நீங்கி, மக்களின் துயர் நீங்கி வாழ்வு செழிக்கவும், அடுத்த ஆண்டு மக்கள் விரும்பும் நல்லாட்சி மலரவும் முருகப்பெருமானை வேண்டி வணங்குவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.